/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rapeni_11.jpg)
தேனி மாவட்டத்தில் தனியார் நர்ஸிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், படித்து வந்துள்ளார். இந்த மாணவியை, நேற்று தேனி ரயில் நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று, அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து திண்டுக்கல் ரயில் நிலையதில் இன்று இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்த மாணவி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார். உடனடியாக, அந்த மாணவியை அழைத்துச் சென்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, மகளிர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்ததன் பேரில், திண்டுக்கல் டவுன் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)