Advertisment

4 வயதுக் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையின் நண்பன்!

Incident happened to 4 years old girl child by her father's friend in pudukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சப்டிவிசனில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவருக்கு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு அவரது நண்பன் எரிச்சி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் பன்னீர்செல்வம் (54) வந்துள்ளார். நண்பன் வந்த நேரத்தில், கூலித் தொழிலாளியும் அவரது மனைவியும் அதே ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தையை பார்க்கச் சென்றனர்.

அபபோது, தங்கள் 4 வயது குழந்தையை வீட்டில் இருந்த தனது வயதான தந்தையிடம் விட்டுவிட்டு சென்றுள்ளனர். கூடவே நண்பன் பன்னீர்செல்வமும் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் முதியவரும் டீ குடிக்க கடைக்கு போன பிறகு அங்கிருந்த பன்னீர்செல்வம் தனியாக இருந்த 4 வயது குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் பெற்றோர் வந்ததும், தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் 4 வயது குழந்தை கூறியுள்ளது. இதனைக் கேட்டு ஆத்திரமுற்ற குழந்தையின் தந்தை, நண்பனிடம் சாதுரியமாக பேசி தனது பைக்கில் ஏற்றி நேராக கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் நடந்த விபரங்களைக் கூறி பன்னீர்செல்வத்தையும் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரனை செய்த கீரமங்கலம் போலிசார், பன்னீர்செல்வத்தை ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் நடந்த விசாரனையில், பன்னீர்செல்வத்திற்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளியில் படிக்கும் வயதில் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

Advertisment

தற்போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பன்னீர்செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

incident Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe