incident happened to 15 year old girl by Father, son in thiruvallur

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (53). இவர், சில ஆண்டுகளுக்கு முன் ஜெயஸ்ரீ (35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவியின் மகனான பரமேஸ்வரன் (24), ஜெயஸ்ரீயின் 15 வயது மகள், சந்திரன், ஜெயஸ்ரீ ஆகிய 4 பேரும் சில வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

Advertisment

இதற்கிடையில், சிறுமி 9ஆம் வகுப்பு படித்து கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சந்திரனும், அவரது மகனும் சேர்ந்து சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது குறித்தும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றுள்ளது.

Advertisment

இந்த புகாரின் பேரில், புழல் அனைத்து மகளிர் காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன், பரமேஸ்வரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஜெயஸ்ரீ ஆகிய மூவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர், கைது செய்தனர். அதன் பின்னர், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை மாதவரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் நடுவன் சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தை, சகோதரன், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய மூவரும் கைதாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.