Advertisment

முதல்வர் வீட்டின் முன் தற்கொலை முயற்சி ஏன்?-நேரில் சென்ற அமைச்சர் மா.சு!

incident in front of the Chief Minister's house ... The Minister who went in person and inquired about his health

தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம் அருகே ஒருவர் உடலில்பெட்ரோல்ஊற்றித்தீவைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையின் மையப்பகுதிகளான ஆழ்வார்பேட்டைசித்தரஞ்சன்சாலையில் மு.க.ஸ்டாலினின் இல்லம் அமைந்துள்ளது. கோட்டூர்புரம் சாலையும்சித்தரஞ்சன்சாலையும் இணையும் இடத்தில் முதல்வரின் வீடு இருப்பதால் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். இதனால் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் வீட்டிற்கு முன்பகுதியில் எப்போதும் இருப்பார்கள். மேலும்,முதல்வரைச்சந்திக்கத்தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள்எனத்தொடர்ந்து வீட்டிற்கு வருவதால் பாதுகாப்பில் எந்தக் குறையும் வரக்கூடாது எனபோலீசார்தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.

Advertisment

இந்நிலையில், இன்று (27.09.2021) காலை முதல்வரின் வீடு இருக்கும்சித்தரஞ்சன்சாலைக்கு வந்த 45 வயது நபர் ஒருவர், கையில் கொண்டுவந்திருந்தபெட்ரோலைமேலேஊற்றித்தீவைத்துக்கொண்டார். இந்தசம்பவத்தைச்சற்று தூரத்தில் நின்றபோலீசார்பார்த்துவிட, நொடிப்பொழுதில் அவர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் அந்த நபரின் கைகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அவரைஆம்புலன்ஸ்உதவியுடன் கீழ்ப்பாக்கம்மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். தென்காசி ஊராட்சி மன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், ஆனால் சிலர் தன்னை மிரட்டுவதாகவும் அவர்போலீசாரிடம்தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில்சிகிச்சைக்காகச்சேர்க்கப்பட்ட அவரைதமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று சந்தித்தது உடல்நலம்குறித்துக்கேட்டறிந்தார்.

Advertisment

Ma Subramanian mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe