Advertisment

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; பணியாளர்களுக்கு நேர்ந்த சோகம்!

incident on Fireworks Factory  at tuticorin

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் இன்று (31-08-24) 5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் 4 ஆண்களும், ஒரு பெண்ணும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த பயங்கர விபத்தில், கண்ணன் மற்றும் விஜய் ஆகியோர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisment

படுகாயமடைந்த பிரசாத் மற்றும் செல்வம் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வெடிவிபத்தால் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

accident fireworks Tuticorin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe