Skip to main content

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்; மகள் தற்கொலை 

 

incident for father request to daughter to make a cooking at  dharmapuri 

 

தந்தை சமையல் செய்யச் சொன்னதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் 17 வயது மகள் பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இந்நிலையில்  மாரியப்பன் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாரியப்பன் தனது மகளிடம் சமையல் செய்து விட்டு, வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு தோட்டத்தில் உள்ள புற்களை அறுத்துக் கொண்டு வந்து போடும்படி கூறியுள்ளார்.

 

தனது தந்தை தன்னை சமைக்கச் சொல்லியதாலும், வீட்டு பராமரிப்பு  வேலைகளைச் செய்யச் சொன்னதால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி  கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு உள்ளார். இதனால் மயக்க நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். சமையல் செய்து விட்டு பராமரிப்பு வேலைகளை செய்ய சொன்னதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாப்பிரெட்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !