சுற்றுலா வந்த இடத்தில் குடும்பத்துடன் தற்கொலை; போலீசார் விசாரணை

n

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நிலையில் தங்கியிருந்த தனியார் விடுதி அறையிலேயே நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல்மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் அவருடைய மனைவி, மகன், மகளுடன் கடந்த 7ஆம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்று அவர்கள் நான்கு பேரும் ஊருக்கு செல்வதாக இருந்தது. அறையில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் முடிந்த பின்னரும் அவர்கள் வெளியே வராமல் இருந்தால் தங்கும் விடுதி ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அறை தாளிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் மாற்று சாவியைக் கொண்டு கதவைத் திறந்த பொழுது நான்கு பேரும் இறந்து கிடந்தனர். விசாரணையில் அவர்கள் விஷயம் அருந்தி உயிரிழந்தது தெரியவந்தது. நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் புதுச்சேரி சுற்றுலா வந்த நிலையில் அங்கு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Investigation police Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe