Advertisment

தீராத வயிற்று வலி; இளைஞர் எடுத்த சோக முடிவு

incident in erode karungalpalayam

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் சரவணன் (23). இவரது மனைவி ரம்யா. சரவணன் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வந்தார். சரவணன் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலி வரும் போதெல்லாம் செத்து விடலாம் போல இருக்கிறது எனக் குடும்பத்தாரிடம் கூறி வந்தார்.

Advertisment

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சரவணன் தனியாக இருந்தார். அப்போது வயிற்று வலியால் துடித்த அவர், வீட்டில் உள்ள அறையில் பெட் சீட்டில் கழுத்தை இறுக்கியவாறு கிடந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து சரவணனைப் பார்த்தபோது அவர் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சரவணன் இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
incident Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe