"தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் எங்க அமைச்சர், எங்க குடும்பங்களையெல்லாம் குப்பை மலைகளுக்கு நடுவே குடியிருக்க வைத்துவிட்டாரே!அது அமைச்சர் கண்ணுக்குத் தெரியவில்லையே" எனப் பரிதாபமாக புலம்புகிறார்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மக்கள்.
இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் தமிழக அமைச்சராகவும் இருப்பதுசீனியரான செங்கோட்டையன் தான். கோபி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கடந்தமூன்றாண்டுகளுக்கு முன்புவரை நாய்கன் காடு என்ற பகுதியில் கொட்டப்பட்டது. அந்தஇடம், குப்பைகளால் நிரம்பி விட்டதால் புதுச்சாமி கோயில் வீதி, பாரதிவீதி, வெங்கட்ராமன் வீதி ஆகிய மூன்று வீதிகளும் சந்திக்கும் இடம் முன்பு பால வித்தியா என்ற பெயரில் செயல்பட்டு வந்தபள்ளிக்கூடத்தில், சென்ற மூன்று வருடமாக குப்பைகளைக் கொட்டி வந்தனர்.
இப்போது அதுவும் நிரம்பிவிட்டதால், பள்ளிக்கு வெளியே பொதுமக்கள் குடியிருப்புகளையொட்டி குப்பைகளைக் கொட்டிவருகிறார்கள். "எத்தனையோ முறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு விட்டோம் எதுவும் நடக்கலே.. துர்நாற்றம், விஷப் பூச்சிகள், கெட்டுப் போன குடிநீர், குழந்தைகள் உடல் நலமில்லாமல் போவது என ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத அவதிகளோடு வாழ்கிறோம். அமைச்சர்வெள்ளை உடை உடுத்தினால் மட்டும் போதுமா, சொந்த தொகுதி, சொந்த ஊரிலே மக்களை நாற்றத்துடன் வாழ வைக்கலமா?" எனக் கேள்வி கேட்கிறார்கள் மக்கள். அமைச்சர் செங்கோட்டையன் தான் பதில் சொல்ல வேண்டும்.