கரோனாவைரஸ் தொடர்ந்து இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ளவர்கள் என்ற வகையில் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையிலும் மக்கள் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsfdsdsds.jpg)
இந்த நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற ஒருவர் தொடர்ந்து இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்துள்ளார். அவர் ஈரோடு மேட்டூர் ரோடு பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு சென்று தினசரி வேலை புரிந்துள்ளார்.இதை கண்காணித்த அதிகாரிகள் இன்று அவரை கைது செய்துள்ளார்கள்.அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த தகவலும் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவருக்கு காய்ச்சல் இருப்பது உறுதியாக தெரிந்துள்ளது. இந்த நிலையில் ஈரோட்டில் பரபரப்பாக இன்று தேடித் தேடிப் போய் போலீஸ் கைது செய்தது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
சம்மந்தப்பட்ட நபர் பெருந்துறைமருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர் சென்ற 10 நாட்களாக பழகிய நபர்கள் பற்றி தொடர்ந்து மருத்துவத்துறை, காவல்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)