Advertisment

கடத்தப்பட்ட காதல் கணவன் மீண்டும் வருவார்..! கைக்குழந்தையுடன் இளம்பெண் பரிதவிப்பு

INCIDENT IN ERODE

எத்தனை நீதிமன்ற தீர்ப்புகள், கடுமையான சட்டங்கள் இருந்தாலும், கலப்பு திருமணம் செய்த காதல் தம்பதியினருக்கு சாதி என்ற அரக்கன் எப்போதும் மிரட்டிக் கொண்டு தான் இருக்கிறான். அப்படித்தான் இந்த இளம் பெண்ணின் வாழ்க்கையிலும் இருக்கிறது.

Advertisment

கரூர் மாவட்டம் நொய்யல் வெள்ளியம் பாளையம் அருகில் செல்வநகர் என்ற பகுதியில் உள்ளவர் காயத்ரி. வயது 22. இவர் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர். சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள ஆட்டுக்காரன்புதூரில் வசிக்கும் செல்வராசு என்பவரின் மகன், 25 வயதான சதீஸ்குமார். இவர் மற்றொரு சமூகத்தை சார்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நான்கு வருடங்களாகவும் இருவரும் காயத்ரியின் ஊருக்கு பக்கத்தில் குடியிருந்து தலை மறைவான வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த சதீஸ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரியின் சமூகம் பற்றி தெரிந்து கொண்டார்கள். இதனால் கோபமுற்ற கணவன் தரப்பினர் காயத்ரியையும் குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்கள். இதன் பிறகு சென்ற 10 நாட்களாக சதீஸ்குமாரை காணவில்லை. எங்கே சென்றார் என்ற விபரமும் தெரியவில்லை. அவரின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வேதனையடைந்த இளம் பெண் காயத்திரி.

2-10-2020 அன்று கடத்தப்பட்ட எனது கணவரை மீட்டு தாருங்கள் என தனது உறவினர்கள் மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை ஈரோடு வடிவேல் ராமன் ஆகியோருடன் வந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

Advertisment

பிறகு எஸ்.பி.பெருந்துறை டி.எஸ்.பி க்கு தகவல் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.

காதல் கணவர் வருவார் என கைக்குழந்தையுடன் கண்ணீரில் காத்துக் கொண்டுள்ளார் இளம் பெண் காயத்திரி.

police Erode incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe