பணம் படைத்தவர்கள் கொலை செய்தால் கூட அது குற்றமாகாதா? ஏழையின் குரல் யாருக்கும் எட்டவில்லையே... என ஈரோட்டில் பரிதவிக்கிறது மர்மமாக இறந்த ஒரு இளைஞனின் குடும்பம். நக்கீரன்இணையத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம் அதன் தொடர்ச்சியாக இன்று மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கி விட்டனர். ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 52 வயதான இளமுருகன் இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் உதய குமார்.

Advertisment

INCIDENT IN ERODE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இளமுருகன் ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு பிரபலமான தனியார் ஜவுளி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கலெக்ஷன் போன்ற வேலைகளை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த நிறுவன ஊழியர்களிடம் நிறுவன உரிமையாளர்கள் விசாரணை செய்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு இளமுருகன் மீது சந்தேகப்பட்டு லுங்கி நிறுவனத்தில் உள்ள தனி அறையில் வைத்து அடித்துள்ளனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சில ஊழியர்கள் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பின்னர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு இளமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இளமுருகன் மகன் தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இளமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் இளமுருகனின் உறவினர்கள் அவரின்இறப்புக்குகாரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.நிறுவன உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளோம் என்றனர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.