Advertisment

எடப்பாடியில் புதுமணப்பெண் தற்கொலை... போலீசார் விசாரணை!

Incident in edappadi... police investigation

Advertisment

சேலம் மாவட்டம் எடப்பாடியில் திருமணமான புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் காவல்துறைக்கு தெரியாமல் மணப்பெண்ணை அவசர அவசரமாகஅடக்கம் செய்ய முயற்சிகள் நடைபெற்றது. இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரை சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும், நல்லன்கியூரை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும் கடந்த 5 ஆம் தேதி பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்சில நாட்களுக்கு முன் அமுதா நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவசர அவசரமாக பெண்ணின் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டுஉடற்கூறாய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி வட்டம்தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident police edapadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe