செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் மருத்துவர் எஸ்தர் வினிதா உயிரிழந்த நிலையில், அவருடன் சென்ற மருத்துவர் கிருஷ்ணா படுகாயமடைந்துள்ளார். அண்மையில் ஈசிஆர் சாலையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில்யாஷிகாவின் தோழி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.