incident due to debt problem; 2 arrested

Advertisment

கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியில் இன்ஜினியரிங் டிசைனிங் பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் என்பவர், அவருடைய மகள், அவருடைய தாயார், மனைவி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்றவர்கள் விஷம் குடித்தும் ராஜேஷ் தூக்கிடும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பாகவே இக்குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் இருப்பவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார், வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்புலன்ஸ் மூலம் நான்கு பேர் உடல்களும் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபாரத், தீபக் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கடனை திருப்பி தர அவகாசம் கேட்டும் அவகாசம் தராமல் மன உளைச்சல் ஏற்படுத்தியதே நான்கு பேர் தற்கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.