திண்டுக்கல்மாவட்டம் வத்தலக்குண்டுவில் காதலியைதனிமையில்சந்திக்ககாதலன் பெட்ரோல் குண்டுவீசியசம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
திண்டுக்கல்மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த அய்யம்பாளையம்பொட்டல் குடியிருப்பு பகுதியில்உள்ள மாங்காய் குடோனில்நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்துஎரிந்தது. இதனால் அதிர்ந்து தீயைகட்டுக்குள்கொண்டுவர அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடிவந்த நிலையில்தகவலறிந்து வத்தலகுண்டு தீயணைப்புதுறையினர் உடனடியாகதீயை அணைத்தனர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்குதகவல் கொடுக்கப்பட்ட நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்இந்த திடீர் தீ விபத்து குறித்துவிசாரணை மேற்கொண்டனர்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மேலும் அருகில் இருந்தசிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அருகில் உள்ள பெட்ரோல்பங்க்கில்சந்தேகப்படும்படி ஒரு இளைஞர் இருவர்வாட்டர்கேனில்பெட்ரோல் வாங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் இருந்தநபரானராஜாங்கத்தை போலீசார் கைதுசெய்தனர். அந்த நபர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும்,கொத்தனார்வேலை செய்து வருபவர்என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ராஜங்கத்திடம் நடத்தியவிசாரணையில் அதிர்ச்சி தரும்தகவல்கள் தெரியவந்தது.
அதே அழகர் பொட்டல் குடியிருப்பைசேர்ந்தஇளம்பெண்ஒருவரைராஜாங்கம் காதலித்து வந்ததாகவும்,அவரைசந்திக்கசென்றால் அப்பகுதி மக்கள் ஏதேனும் கேள்விஎழுப்புவார்கள் எனபயம் கொண்டராஜாங்கம் அப்பகுதி மக்களைதிசை திருப்பி தன் காதலியைசந்திக்கஅந்த பகுதியில்உள்ள மாங்காய் குடோன் மீது பெட்ரோல்குண்டைவீசியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே திடீரென ஏற்பட்டதீ விபத்தைஅணைக்கஅப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில்ஒன்றுகூட ராஜாங்கம் அவரதுகாதலியைதனிமையில் சந்தித்துள்ளார்.
இளைஞர் ஏற்படுத்திய இந்த விபத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் காதலியைஇடையூறின்றி சந்திக்கபெட்ரோல் குண்டு வீசி தீவிபத்தைஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்த போலீசார்ராஜாங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.