
திண்டுக்கல்லில் ஒரே நாளில் 3 கொலைகள் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் நேற்று இரவு அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கழுத்தை அறுத்து கொன்று விட்டுத் தப்பி ஓடினர். இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் திண்டுக்கல் அடுத்துள்ள கதிரையன்குளத்தில் முன்விரோதம் காரணமாக சிவா என்பவரை அதேபகுதியில் உள்ளவிநாயகர் கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சில நபர்கள் அரிவாள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வெட்டிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புளியமரத்து செட் என்னும் பகுதியில் ஈஸ்வரன் மகேந்திரன் ஆகிய சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் ஈஸ்வரன் நுங்கு வெட்ட வைத்திருந்த கத்தியால் மகேந்திரனை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரே நாளில் திண்டுக்கல்லில் மூன்று படுகொலைகள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)