Advertisment

செல்ஃபி எடுக்க முயன்று வரதமாநதியில் தவறிவிழுந்த மூவர் உயிரிழப்பு!

incident in dindigul

பழனி அருகே உள்ள வரதமாநதி அணையில் தவறிவிழுந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கடற்கரை, அருவிகள் போன்ற இடங்களுக்கு மக்கள் அதிகமாகச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வரதமாநதி அணைக்குசுற்றுலாப் பயணிகள் அதிகமாகவந்திருந்தனர்.

Advertisment

இன்று மாலை வரதமாநதி பகுதிக்கு வந்த சில இளைஞர்கள் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று இளைஞர்கள் தவறி விழுந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று பேர் உடல்களையும் மீட்டுள்ளனர். விக்னேஷ் (அண்ணன்) லோகேஷ் (தம்பி) சென்னை சேர்ந்தவர்கள். மற்றொருவர் கணேஷ் எனநண்பர்கள் மூவரும் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்ததில் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident pazhani Selfie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe