Advertisment

திருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது!

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த திருமணமான சலோமி என்ற பெண் வடலூரில் உள்ள தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். நெய்வேலியில் இருந்து தினந்தோறும் பேருந்தில் செல்வது வழக்கம். அப்போது அந்த பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் சுந்தரமூர்த்தி என்பவருடன் நட்பாக பேசியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட சுந்தரமூர்த்தி சலோமியை ஒருதலையாக காதலித்துள்ளார்.

Advertisment

incident in cuddalore...police arrest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனால் சுந்தரமூர்த்தியுடன் பேசுவதை சலோமி தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி நேற்று அவர் வேலை செய்யும் கடைக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.இதில் படுகாயமடைந்த சலோமி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்தவ மனையில் சேர்க்கப்பட்டார்.

அதையடுத்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து வழக்குப் பதிந்து சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

arrest Cuddalore love incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe