ரவுடியின் மனைவி 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி! 

incident in cuddalore... police investigation

கடலூரில் பிரபலரவுடியின்மனைவியை12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்குப்பன்குளத்தில்வீரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கியரவுடிகளாகஇருந்தனர்.இவர்களுக்கிடையே அடிக்கடி தொழில் போட்டி காரணமாகமோதல்போக்குஇருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த வருடம் கிருஷ்ணா தரப்பினர்வீராவைவெட்டிப் படுகொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில்ரவுடிவீராவைகொலை செய்தரவுடிகிருஷ்ணாபோலீஸ்என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில் கிருஷ்ணாவின் மனைவியை 12 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் கடலூர்குப்பன்குளத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துபோலீசார்நடத்திய விசாரணையில், அரவிந்தன் என்பவருக்கும்கிருஷ்ணாவின்மனைவியான காந்திமதிக்கும் திருமணத்தை மீறிய தவறான உறவுஇருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரவிந்தன் அவரது நண்பர்களை வைத்து அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை செய்ய இரண்டு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால்அசம்பாவிதங்களைத்தடுப்பதற்காகபோலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

Cuddalore police rowdy
இதையும் படியுங்கள்
Subscribe