Advertisment

லாரி பைனான்ஸ் கட்டாததற்கு அவமானப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிராங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் கலையரசன்(33) டிரைவராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

incident in cuddalore... police investigation

இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சோழமண்டலம் பைனான்ஸில் கடன்பெற்று லாரி வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் தொகையை கட்ட காலதாமதமாக இருந்ததனால் வங்கி ஊழியர்கள் நேற்று இரவு கலையரசனை சந்தித்து தகாத வார்த்தைகளால் திட்டி உடனடியாக மீதி உள்ள கடன் தொகையை கட்ட வேண்டும் என்று எச்சரித்து சென்றுள்ளனர்.

Advertisment

மனவேதனை அடைந்த கலையரசன் மருந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மயங்கி விழுந்துள்ளார். சம்பவத்தை அறிந்த உறவினர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த கலையரசன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

commit suicide Cuddalore Investigation lorry police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe