incident in cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேகீழக்கல்பூண்டியில் உள்ள அய்யனார் கோயில் அருகில் அடையாளம்தெரியாத 45 வயது மதிக்கத்தக்கபெண் சடலம் அரை நிர்வாண நிலையில்கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் ராமநத்தம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தைப்பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சடலமாகக்கிடந்தவர் வடகராம்பூண்டியைச் சேர்ந்த அமுதவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என்று தெரியவந்தது. இவர் ஹோட்டல் கடையில் வேலை செய்து வந்தவர் என்றும், இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இறந்துகிடந்த கருப்பாயினுடையதலையில் மட்டும் காயம் இருந்துள்ளது. மேலும் அவர் அருகே, குடை, உணவுப் பொட்டலங்கள், கற்கள் இருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். வன்கொடுமை செய்து அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ராமநத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.