Advertisment

15 வயது சிறுமியை  கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது!

incident in cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த சிறுமி அரசூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதற்காக பண்ருட்டி பேருந்து நிலையம் செல்லும்போது அங்குள்ள பழக்கடையில் வேலை செய்யும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இருந்து தட்சினாமூர்த்தி (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். காதலிக்கும் போது அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டனர். அதன்படி சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வருமாறு சிறுமியை தட்சிணாமூர்த்தியை அழைத்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி திருமண ஆசை காட்டி தன்னை தட்சிணாமூர்த்தி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அதனால் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisment

சிறுமிக்கு 14 வயது தான் என தெரிந்து கொண்டு, அவர்கள் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா மற்றும் போலீசார் தட்சினாமூர்த்தியை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Sexual Abuse arrest police Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe