கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மொழி (40). இவர் வடலூர் அருகேயுள்ள கொளக்குடி அஞ்சல் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலதண்டாயுதம்(44) இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன. முல்லை வனநாதன்(8), கோகுலகிருஷ்ணன் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாலதண்டாயுதத்துக்கு மனைவி அருள்மொழியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவரிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படுவதும், அருள்மொழி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் , உறவினர்கள் சமாதனம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

INCIDENT IN CUDDALORE

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்த பாலதண்டாயுதம் வீட்டிற்கு வந்தபோது மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலதண்டாயுதம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அருள்மொழியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். அருள்மொழியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அருள்மொழி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Advertisment

INCIDENT IN CUDDALORE

Advertisment

அதையடுத்து காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் மலர்விழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரித்தனர். மேலுல் இது தொடர்பாக அருள்மொழி தந்தை வீரமணி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலதண்டாயுத்தை கைது செய்தனர் . விசாரணையில் பாலதண்டாயுதம்,"நானும் எனது மனைவியும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எனது மனைவி அஞ்சல் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். தினந்தோறும் வேலைக்கு செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டே செல்வார். இதனால் எனது மனைவி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. 'ஏன் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருக்கிறாய்?' என்று கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. அன்று ஏற்பட்ட தகராறில் மனைவியை வெட்டிவிட்டு அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி வெளியூர் செல்ல முயன்றபோது போலீசார் என்னை கைது செய்தனர்" என்று கூறியுள்ளார்.

சந்தேகத்தில் மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.