CUDDALORE

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கட்டான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார். இவர் குடும்பத்துடன் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் சாலையில் தங்கிக்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று காலை பணிக்கு சென்ற போது, அவரது மகள் அழகம்மாள் (15 )மற்றும் இவரது தங்கை, தம்பியுடன் அருகில் இருந்த பாசிமுத்தான் ஓடை வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது வாய்க்காலில் படிதுறையில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் சென்றுள்ளார். இதனை அவரது தம்பி மற்றும் தங்கை பார்த்து அலறி துடித்தபோது பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்ற முயற்சிக்க,உடல் மறைந்துவிட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர், மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை தொடர்ந்து தேடிவருகிறார்கள். வாய்காலில் விழுந்து சிறுமி உடல் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment