கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஸ்ரீராம் பைனாஸ் கம்பெனி கிளை உள்ளது. இங்கு அகரம் சீகூரை சேர்ந்த ராஜா நாடார் என்ற இளைஞர் அந்த பைனான்ஸ் கம்பெனி மூலம் 5 .10.18 ல் டூவீலர் லோன் வாங்கியுள்ளார். முறையாக தவணை செலுத்தி வந்த ராஜா சமீபத்தில் இரண்டு தவணை பணம் செலுத்தவில்லையாம்.

Advertisment

INCIDENT IN CUDDALORE

ஸ்ரீராம் பைனான்ஸ் கம்பெனி ஆட்கள் பலர் ராஜா வீட்டுக்கு சென்றுள்ளனர். 4ம் தேதி ராஜாவை ஏன் பணம் கட்டவில்லை என்று மிரட்டியுள்ளனர். ராஜா தனது கஷ்ட நிலமையை சொல்லியும்கூட அவரை பலர் முன்னிலையில் மிரட்டியும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதனால் அவமானம் தாங்காத ராஜா தனது ஊர் அருகேயுள்ள தோப்பில் உள்ள மரத்தில் தனது லுங்கியினால் தூக்கு மாட்டி தற்க்கொலை செய்து கொண்டார்.

INCIDENT IN CUDDALORE

Advertisment

விஷயமறிந்த மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து உரியவிசாரணை செய்து வருகிறார்கள். இன்று அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யட்டுள்ளது. ஸ்ரீராம் பைனாஸ் கம்பெனி ஆட்கள் இதே போன்று லோன் பெற்றவர்களை பல ஊர்களுக்கும் சென்று மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே ஸ்ரீராம் பைனான்ஸ் கம்பனி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.