சிதம்பரத்தில் உணவு சரியில்லை என கரோனா வார்டில் இருந்து வெளியேற முயன்றதால் பரபரப்பு! 

 incident in Corona ward in Chidambaram

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடலூர் மாவட்டத்தில் கரோனாதொற்று நோயால் பாதிக்கப்பட்டள்ளவர்களுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றும், புளித்து போன உணவுகளை வழங்குவதாகவும்,உணவுகளை மிகவும் குறைவாக தருவதாகவும் நோயாளிகள் மத்தியில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து நோயாளிகள் புகார் கூறியுள்ளனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்பதையறிந்த நோயாளிகள் மருத்துவமனையில் சனிக்கிழமையன்று சாப்பிடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர்அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரப் போகிறோம் என அறிவித்து வெளியே வர முயற்சி செய்தனர். இதனை அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்ட மருத்துவர்கள் அவர்களை வெளியே வராதீர்கள் இது சமூக தொற்றாக மாறிவிடும் தயவுசெய்து உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நாங்கள் முழு முயற்சி எடுக்கிறோம் என உறுதி அளித்தனர்.

உணவு குறித்து புகார் இருந்தால் டிஎஸ்பி தொலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுங்கள் உங்களின் புகார் உடனே சரிசெய்யப்படும் என அவரது தொலைபேசி எண்ணை கொடுத்தார். பின்னர் மருத்துவமனையில் உணவு வழங்கும் ஒப்பந்ததாரை அழைத்து சரியான முறையில் உணவுகளை வழங்கவேண்டும் என்று கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து நோயாளிகள் அமைதியாக வார்டில் இருந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

chithambaram district corona virus hospital
இதையும் படியுங்கள்
Subscribe