குளோரைடு வாயு சிலிண்டர் வெடிப்பு; மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறு பாதிப்பு

incident chloride gas cylinder causes eye irritation in people

திருச்சி அருகே அமோனியம் குளோரைடு வாயு சிலிண்டர் வெடித்ததில் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று அதிகாலைதனியார் பால் நிறுவனத்தில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் வெடித்துள்ளது. அப்போது வாயு அந்த பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe