incident in chithamparam

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவானந்தம் (56). விவசாயியானஅறிவானந்தம் திங்கள் கிழமை மாலை தனது விவசாயப் பணிகளை முடித்துவிட்டு கிராமத்தின் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.

அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றது. வலி தாங்கமுடியாமல் அவர்அலறிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த ஊர்பொதுமக்கள் முதலையை விரட்டியுள்ளனர். முதலை உடலை ஆற்றின் நடுவே இழுத்துச்சென்று விட்டது. பின்னர் தேடியும்உடல் கிடைக்கவில்லை.இதனைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயியின் உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை இதனால்பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

Advertisment

இந்தநிலையில் வேளக்குடிபகுதியில் திடீரென மழை பெய்ததால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால்,ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீரென சிதம்பரம்- சீர்காழி-வேளக்குடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது.