incident in chithambaram

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி சம்பவ இடத்திலேயேஇயந்திரத்தின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் அதே கிராமத்தில் உள்ள நிலத்தில், ஸ்ரீமுஷ்ணம் நாச்சியார் பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் கார்த்திக் (31) என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டார்.

Advertisment

அப்போது அந்த நிலத்தின் வழியே செல்லும்மின் கம்பி தாழ்ந்து இருந்ததால் நெல் அறுவடை செய்தபோது மின்கம்பி உரசி சம்பவ இடத்தில் கார்த்திக் பலியானார். இதுகுறித்து மணிமாறன் கார்த்திக்கின் அப்பா அண்ணாதுரைக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் அண்ணாதுரை அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.