சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி குஞ்சிதபாதம் நகரில் வசிக்கும் பிரான்சிஸ் (55) இவர். சி.கொத்தங்குடி திமுக கிளை கழக செயலாளராக உள்ளார். இவர் அவரது மனைவி உமாராணி ( 50 ) உடன் இன்று இருசக்கர வாகனத்தில் விருத்தாசலத்தில் அவர்களின் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வரும்போது சீயாப்பாடி - உடையூர் இடையில் வந்துகொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையின் இடதுபுறமாகஅமைக்க நடப்பட்டிருந்ததடுப்பு பேனலில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
அவர்களின் உடலை காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.