Skip to main content

கீழ்பாக்கத்தில் மருத்துவ மாணவி மரணம்... போலீசார் விசாரணை!! 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020
incident in chennai... police investigation

 

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மருத்துவ மாணவி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இவர் சென்னை பெரம்பூரில் வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில், தற்பொழுது கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையிலேயே தங்கி பயிற்சி மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அவர் மருத்துவமனை வளாகத்திலேயே பயிற்சி மருத்துவர்கள் தங்கக்கூடிய அறைகளில், ஆறு என்ற எண் கொண்ட அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று பணிமுடிந்து அறைக்கு சென்ற அவர் இன்று அறையிலிருந்து வெளியே வராததால் சக பயிற்சி மாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவலாளிகளை கொண்டு அறையை திறந்தபோது அவர் அறையின் உள்ளே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் கரோனாவால்  உயிரிழந்தாரா என கேள்விகள் எழ, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் அந்த மாணவி கரோனா வார்டில் பணிபுரியவில்லை என்றும், கர்ப்பிணிகளுக்கான வார்டில்தான் அவர் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவருடைய மரணம் பற்றி உறுதியான தகவல்கள் வெளியாகும். அதேபோல் போலீசார் விசாரணையில் இது தற்கொலை இல்லை என்றும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று அவர் பெற்றோர்களுடனும், தோழிகளுடனும் செல்போனில் பேசியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அவரது செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மருத்துவ பயிற்சி மாணவி மரணம் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.