Advertisment

தோசை மாவில் தூக்க மாத்திரை... கணவனை கொலை செய்த பெண்!

சென்னை புழல் வெங்கடசாயி நகரை சேர்ந்தவர் சுரேஷ். கறிக்கடை தொழிலாளியான இவருக்கு அனுப்பிரியா என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். மகழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில், மனைவியின் தவறான நடத்தையால் புயல் அடிக்க துவங்கியது.

Advertisment

nn

மதுபோதைக்கு அடிமையான சுரேஷ், தினமும் மனைவி அனுப்பிரியாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால், தவறான தொடர்பு வைத்திருந்த நபருடன்சேர்ந்து அவரை கொலை செய்ததோடு, மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார் மனைவி. ஆனால், போலீஸார் நடத்திய விசாரணையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது.

Advertisment

இதுதொடர்பாக அனுப்பிரியா அளித்த வாக்குமூலத்தில், "நேற்றிரவு வீட்டிற்கு வந்த உடன் தூக்க மாத்திரை கலந்த மாவில் சுரேஷூக்கு தோசை சுட்டுக் கொடுத்தேன். பின்னர் காதலன் முரசொலிமாறனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தேன். அவன் வரும்போது சுரேஷ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தோம். பின்னர் நாங்கள் வேறு ஒரு அறையில் தூங்கினோம். காலையில் எழுந்தபோது கணவன் இறந்ததாக நாடகம் ஆடினேன். ஆனால் போலீஸார் கண்டு பிடித்து விட்டனர்" என குறிப்பிட்டுள்ளார்.

Chennai Investigation murder police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe