''நீ பேசிக்கோ ஆனா தாலி மட்டும் கட்டவிடு அனிதா...'' காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

சென்னை பல்லாவரத்தில் திருமணம் ஆன ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

incident in chennai... police arrest husband

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலத்தை சேர்ந்தவர் மனிஷா. இவர் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அபின்ராஜ் என்பவரை காதலித்துள்ளார். அந்த காதலுக்கு மனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க குடும்ப உறவுகளையும்மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் அபின்ராஜூடன் ஓராண்டாக வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் இருவரும் ஓராண்டாக தனியாக வசித்து வந்த நிலையில் மனிஷா கருவுற்றார். ஆனால்இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு முறை ஏற்பட்ட சண்டையின் பொழுது அபின்ராஜ் மனிஷாவின் வயிற்றில் உதைததால்வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது.

incident in chennai... police arrest husband

இந்த சண்டைகளுக்கு பிறகும் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். ஓராண்டாகியும் தன்னை திருமணம் செய்து கொள்ளாத அபின்ராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனிஷா வற்புறுத்தியுள்ளார். ஆனால் காதலன் அபின்ராஜ் சொன்ன பதிலால் மோனிஷா அதிர்ந்து போனார். அதாவது தான் அனிதா என்ற மற்றொரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளான். பெற்றோரை பிரிந்து விட்ட நிலையில் ஆதரவின்றி தவித்து வந்த மனிஷா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவனிடம் தொடர்ந்து கெஞ்சியுள்ளார்.

incident in chennai... police arrest husband

அவர் காதலிப்பதாக கூறிய அனிதா என்ற பெண்ணிடமும் தாலி பிச்சை கேட்டு கதறி உள்ளார் மனிஷா. கான்பரன்ஸ் காலில் அனிதா அபின்ராஜ் மற்றும் மனிஷா ஆகிய மூவரும் பேசிக்கொண்ட ஆடியோ மனிஷாவின் செல்போனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் மனிஷா அனிதாவிடம் ''எனக்கு தாலி பிச்சை கொடு அனிதா ப்ளீஸ்... ப்ளீஸ்... அனிதா உன் கால்லகூட விழுறேன்... நீங்க பேசிக்கோங்கஉங்களவேண்டாம்னு சொல்லல ஆனா எனக்கு தாலி மட்டும்கட்ட விடு உன்னை கெஞ்சி கேட்கிறேன் அப்பா அம்மாவஎழந்து வந்து இருக்கேன் அனிதா...'' என கெஞ்சியுள்ளார்.இதற்கு மறுமுனையில் பதில் அளிக்கும் அபினராஜுநான் சொல்வதைக் கேள் நான் அவளிடம் உன்னிடம் பேசிய ஒருவருடத்திற்கு முன்பே அனிதாவிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன் எனக் கூறியுள்ளான்.

incident in chennai... police arrest husband

இந்நிலையில் ஒருவழியாக இந்த பிரச்சனை முடிவுக்குவர, மனிஷாவை அபின்ராஜ் ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் செய்து கொண்டான். ஆனால் அதன்பிறகும் அனிதா உடனான உறவுதொடர்ந்ததாக தெரிய ஒரு கட்டத்தில் மனம் உடைந்த மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

incident in chennai... police arrest husband

காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறியபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது என மனிஷாவின் தந்தை முருகன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனிஷாவின் தற்கொலைக்கு காரணம் அபினராஜ் தான்என்பது ஊர்ஜிதமானது.இதனையடுத்து அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest Chennai commit suicide lovers police
இதையும் படியுங்கள்
Subscribe