Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

incident for chennai Office of the Communist Party of India

சென்னையில் உள்ளஇந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை தியாகராயர் நகரில் உள்ள செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைமை அலுவலகம் ‘பாலன் இல்லம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகம் மீது நேற்று இரவு மர்மநபர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisment

இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தேடி வருகின்றனர். அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து தென்சென்னை மாவட்டச் செயலாளர் சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

police Chennai cpi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe