சென்னை எம்ஜிஆர் நகரில் பாலுக்காக அழுத குழந்தையை குடிகார தந்தை அடித்து கொலை செய்ததும், அந்தகொலையை மறைத்து கணவனை காப்பாற்ற குழந்தையின் தாய் நாடகமாடியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சென்னை எம்ஜிஆர் நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவன் எல்லப்பன். இவன் அதே பகுதியில் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான துர்கா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆன நிலையில் எல்லப்பனும் துர்காவும் குடிப்பழக்கம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. எனவே அடிக்கடி இருவரும் குடித்துவிட்டு சண்டையிட்டு வந்துள்ளனர். அதேபோல் இன்றும் குடித்துவிட்டு இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது இரண்டு மாத பெண் குழந்தை பாலிற்காக அழுதுள்ளது. அப்போது போதையில் இருந்த எல்லப்பன் ஆத்திரத்தில் குழந்தையை பலமாக தாக்கியுள்ளான்.இதனால் குழந்தை மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் துடிதுடித்து இறந்துள்ளது. குழந்தை இறந்தது தெரியாமல் இருவரும் கேகேநகர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்துள்ளனர். குழந்தை தாக்கபட்டதால்இறந்ததை அவர்கள் அறியவில்லை.
இதனையடுத்து குழந்தையை எல்லப்பன் கொன்றதை மறைக்க திட்டம் தீட்டிய தாய் துர்கா குழந்தை மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்து ஆடைகளை மாற்றி வேறோரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். குழந்தையை மீட்ட ஆம்புலன்ஸ் மீண்டும் கேகே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, குழந்தையை பார்த்த மருத்துவர்கள் தற்பொழுதுதான் இந்த குழந்தை இறந்து விட்டதாக கூறியதாக தெரிவித்தனர். மேலும் இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் எம்ஜிஆர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் எல்லப்பன் மற்றும் அவனது மனைவி துர்காவிடம் நடைபெற்ற விசாரணையில் குடிபோதையில் நடந்த சண்டையில் பாலிற்காக ஏங்கிய குழந்தையை தலையில் அடித்து எல்லப்பன் கொன்ற அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.