incident in chennai korukkupettai

Advertisment

சென்னை கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரில் இரண்டாவது குறுக்குத் தெருவில்உள்ள ஒரு வீட்டில், மூன்று பேர் தீயில் கருகிய நிலையில்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். வெங்கடம்மாள்என்பவர் மகள் ரஜிதாவுடன் வசித்துவந்தார். இந்நிலையில்இன்று (05.02.2021) வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டஅக்கம்பக்கத்தினர், கொருக்குப்பேட்டை தீயணைப்புதுறைக்கும்ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்ததீயணைப்புதுறையினர் தீயைஅணைத்தனர். அப்போது வீட்டினுள் தாய் வெங்கடம்மாள், மகள் ரஜிதாஆகியோர்தீயில் கருகியநிலையில் மூன்றாவது நபர் ஒருவரும்தீயில்கருகிஉயிழந்துள்ளார். மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார்உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

incident in chennai korukkupettai

Advertisment

தந்தையின் மறைவுக்குப் பிறகு, ரஜிதாமாநகராட்சியில்ஒப்பந்த பணியாளராகபணியாற்றிவந்த நிலையில், அதேஅலுவலகத்தில் பணியாற்றிவந்த பூபாலன்என்பவரைக் கடந்த7 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார். இந்நிலையில் ரஜிதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பூபாலன்விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.வீட்டில் மண்ணெண்ணெய் கேன்ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக தீயில்எரிந்தநபர் ரஜிதாவின் காதலன்பூபாலன்என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தச் சம்பவத்தில் போலீசாரின்விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையைஅடுத்தேஉண்மைகள்தெரியவரும்.