Advertisment

வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு!

incident in chennai avadi

சென்னை ஆவடி அயப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது மனைவி சசிகலா என்பவருடன் வசித்து வருகிறார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைசெய்துவரும் விஜயகுமாரும் அவரது மனைவியும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காகச் செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை 'ஆன்' செய்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக, மனைவி சசிகலா மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக்காப்பாற்ற முயன்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

உயிரிழந்த 'விஜயகுமார்-சசிகலா' தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

accident avadi Chennai electicity
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe