incident in chennai

சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வேன் கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisment

கடலூரிலிருந்துநாளை நடைபெற இருந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்னைக்குவேனில் வந்த நிலையில்சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில்35 பேர் காயமடைந்தனர். இதில் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 35 பேரில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment