Published on 05/09/2020 | Edited on 05/09/2020

சென்னை சூளைமேட்டில், வீட்டு நாற்காலியில் இருந்து கீழே விழுந்த டிவியால் 2 வயது பெண் குழந்தை இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலமாரியில் ஏறிய பூனை கீழே குதித்த பொழுது 2 அடி சிறிய நாற்காலி மீது இருந்த டிவி, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்தது.
டிவி விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அண்மையில் இதே சென்னையில் அலமாரியில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த செல்ஃபோனை எடுக்கச் சென்ற குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழந்த சம்பவமும், அதேபோல் வாணியம்பாடியில் வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.