Incident in chennai

Advertisment

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திர பதிவுத்துறை ஐஜியாக பணியாற்றி வரும் சிவனருள் என்பவர் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடன் அவருடைய மனைவி சுமதி மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை கழிவறைக்குச் சென்ற சுமதி நீண்டநேரமாக வெளியே வராததால் வீட்டிற்கு வந்த வேலையாள் ஒருவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபொழுது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுமதி சடலமாகக் கிடந்தார். சடலமாகக் கிடந்த சுமதியின் கையில் பிளேடு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் தற்கொலைக்கான கடிதமும் அங்கேயே கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.