விநாயகர் சிலையைக் கடலில் கரைக்கச் சென்றபோது கடலில் விழுந்தமகனைக் காப்பாற்றிய தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம்வெங்கடேசபுரம்பகுதியைச்சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி நிகழ்விற்காக வீட்டில் விநாயகர்சிலை வைத்து வழிபட்டுள்ளார். பின்னர் விநாயகர் சிலையை மகன்களுடன்பாலவாக்கம்கடற்கரை பகுதிக்குக் கரைக்கச் சென்றார். அப்பொழுது விநாயகர் சிலையைக் கரைக்கும் போது கடலலை அவரது மகனை இழுத்துக்கொண்டு சென்றது. கடல் அலையில் சிக்கிய மகனை சுரேஷ் காப்பாற்றி கரையை நோக்கி வீசிய நிலையில், எதிர்பாராதவிதமாக சுரேஷ் கடல் அலையில் சிக்கினார். அங்கிருந்தவர் சிறுவனைக்காப்பாற்றி விட்டனர். ஆனால்சுரேஷைகடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.
அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன்சுரேசைமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குஅழைத்துச்சென்றனர். ஆனால் இறுதியில் சுரேஷ்ஏற்கனவேஇறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நீலாங்கரைபோலீசாருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விநாயகர்சிலையைக்கரைக்கச்சென்ற இடத்தில் கடலலையில் சிக்கியமகனைத்தந்தை காப்பாற்றிய நிலையில், தந்தை கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.