Published on 13/04/2021 | Edited on 13/04/2021

சென்னையில் லிஃப்ட் கேட்பதுபோல் ஏமாற்றி, இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்ற கணேஷ் என்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட்பதுபோல் பைக்கை நிறுத்திய பெண் ஒருவர், அவரிடம் இருந்து செல்ஃபோனை வழிப்பறி செய்துள்ளார். இது தொடர்பாக கணேஷ் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, பரசுபாலன், முத்துகுமார், உதயகுமார் ஆகிய நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.