சென்னையில் கல்லூரியின் முதல் தளத்தில் முன்னாள் கல்லூரி பேராசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

hh

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் முதல் தளத்தில் அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியை தனலட்சுமி தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பேராசிரியை தனலட்சுமி5 ஆண்டுகளுக்கு முன்பு அக்கல்லூரியில் பணியாற்றியவர் ஆவார். கல்லூரியின் முதல்தளத்தில் உள்ள அறையில் முன்னாள் பேராசிரியை தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.