Advertisment

6ஆம் வகுப்பு சிறுமி முகம் சிதைக்கப்பட்டு கொலை... விசாரணையில் அதிர்ச்சி!

Incident in chengalpattu...

Advertisment

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவி முகத்தில் காயங்களுடன் சந்தேக மரணமடைந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவந்தது. இந்தச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தசதுரங்கப்பட்டினம் அருகே வெங்கம்பாக்கத்தில் 11 வயது சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து வெளியே சென்றநிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது உறவினர்களும் பெற்றோரும் அந்தக் கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியும் கிடைக்காததால்,நேற்று முன்தினம் (29.06.2021) காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஒரு வீட்டின் அருகே உள்ள முட்புதர்களுக்கு இடையில்பலத்தக் காயங்களுடன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட சிறுமியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisment

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு சிறுமிக்கு என்ன ஆனது, எதனால் சிறுமி உயிரிழந்தார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், சந்தேகத்தின் பெயரில் அதே ஊரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

Incident in chengalpattu...

சிறுமியின் முகம் சிதைக்கப்பட்டிருப்பதால் இது கண்டிப்பாக கொலையாகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் தற்போது இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.அச்சிறுமியைக்கொலை செய்தஅதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது சிறுமி அலறிக் கூச்சலிட்டதால் கல்லால் தாக்கி சிறுவன் சிறுமியைக் கொன்றது விசாரணையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu Investigation police
இதையும் படியுங்கள்
Subscribe