Published on 26/04/2021 | Edited on 26/04/2021

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள காத்தங்கரை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த நிலையில் எதிரில் மேல்மருவத்தூர் ராமாவரம் கிராமத்தில் இருந்து நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக மக்களை ஏற்றிக்கொண்டு கல்பாக்கம் நோக்கி தனியார் பேருந்து வந்தது. இரண்டு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.