சாலையை கடக்க முயன்ற நபருக்கு நேர்ந்த சோகம்; தீவிர விசாரணையில் போலீசார்!

Incident befell a person trying to cross the road in kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், புறவழிச் சாலையில் ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் புறவழிச் சாலையை கடக்க முயன்ற போது நாமக்கல்லில் இருந்து சென்னை நோக்கி முட்டைகளை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற அடையாளம் தெரியாத அந்த நபர், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான போலீசார் விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக தலை நசுங்கி உயிரிழந்தவர் யார் என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்துகின்றனர்.

accident kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe