Advertisment

ஆவடியில் ரவுடி தொனியில் சுற்றித் திரிந்த நபர் கொலை!

ஆவடி பூம்பொழில் நகர் பகுதியை சேர்ந்த புஜ்ஜி என்பவர் அவரது வீட்டின் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் ஆவடி டேங் பேக்டரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகஇந்த கொலையை யார் செய்தார்கள் என்பதை ஆவடி டேங் பேக்டரிகாவல்நிலையஇன்ஸ்பெக்டர் நடராஜ் விசாரித்து வருகின்றார்.

Advertisment

incident in avadi

புஜ்ஜி என்பவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில்புஜ்ஜியின் மனைவி நீண்ட நாட்களுக்கு முன்பாகஅவரைவிட்டுவிட்டு வேறு ஒருவருடன்பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இந்த காரணத்தால் தினமும் குடிமட்டுமே வாழ்க்கையென ஒயின்ஷாப்பிலேயேகிடந்துள்ளார்.

இந்தநிலையில் புஜ்ஜி மீது 2010 ஆம் ஆண்டில் இரும்பு கடத்திய ஒரு வழக்கு மட்டுமே உள்ள நிலையில், இதை வைத்துக்கொண்டு தான் பெரிய ரவுடி தொனியில் ஒயின்ஷாப்புக்கு வருவரிடம்மிரட்டி குடிப்பதே இவரின் பணியாகவேஇருந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான்நேற்று இரவு அவரது வீட்டின் அருகே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

avadi incident police rowdy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe