incident in auditor gurumoorthy house... highcourt

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக பதியப்பட்டவழக்கில்,முன்ஜாமீன் கேட்டு சென்னை மயிலாப்பூரைசேர்ந்த திலீபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனுவை நீதிபதி வேலுமணி விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில், கூடுதல் பப்ளிக் பிராசிக்யூட்டர் ஜோதிகுமார் ஆஜராகி, மனுதாரர் சதியில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. எனவே, முன்ஜாமீன் தரக்கூடாது என்று கூறினார்.

Advertisment

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கும் முன்ஜாமீன் தரவேண்டும் என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, அந்தமுன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மனுதாரர், முன்ஜாமீனை வாபஸ் பெறுகிறேன் என்று கூறியதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.