ஆடு மேய்த்த இளைஞர் கழுத்தறுத்துக் கொலை!

incident in ariyalur

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது மேலவண்ணம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்.இவரது மகன் 35 வயது பழனிவேல். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆடு வளர்க்கும் இவர் தினசரி அப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு மாலையில் வீடு வருவது வழக்கம்.அதேபோல் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்காக கீழப்பழுவூர் அருகே உள்ள தரிசு நிலப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்படி ஆடு மேய்க்கச் சென்ற பழனிச்சாமி கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்துள்ளார்.

அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.அவரது முதற்கட்ட விசாரணையில் பழனிச்சாமி ஆடு மேய்க்கும் போது அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது சாப்பிட்டகவும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனிச்சாமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பழனிச்சாமி கொலை செய்யப்பட்டதர்க்கு மது குடிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினை தான் காரணமா வேறு ஏதேனும் காரணமாஎனபல்வேறு கோணங்களில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ariyalur incident
இதையும் படியுங்கள்
Subscribe